My Blog List

Sunday, April 18, 2010

வண்ணத்துப்பூச்சி பிடிக்க தெரியுமா? catching butterfly

வண்ணத்துப்பூச்சி பிடிக்க தெரியுமா?

(first photo courtesy: wiki)..மத்ததெல்லாம் என்னோட lumix கொடுத்தது.

இந்த செடியை வைத்துதான் நான் பட்டாம்பூச்சி(பாப்பாத்தி -ன்னு நாங்க சொல்லுவோம்) புடிப்பேன்..நாங்க ஊர்ல இருந்த.. அப்போ!  இந்த செடி பேரு என்னன்னு ஞாபகம் இல்ல..

ஆனா துண்டு (towel) வச்சு புடிக்கிரது தான் ரொம்ப ஈசி!

அந்த வெள்ளை பூவில் கொஞ்சம் தேன் கூட இருக்கும்..ரொம்ப கம்மியா இருக்கதுன்னால ரொம்ப சுவையாவும் இருக்கும்.

இந்த செடி கொளிஞ்சி (nor sure abt spelling) .இதை அறுத்து வயலுக்கு உரமா போடுவோம்..நல்ல உரம்-ன்னு அப்பா சொல்வாங்க..இதோட வேர் ரொம்ப ஸ்ட்ராங் -அப்ப்டின்றது என்னோட observation..really strong.

நீங்க கீழே பார்க்கிறது எங்க அம்மாயி-இன் தோட்டம்.எல்லா ஸ்கூல் summer hol's-ல இங்க போக நான் காத்துகிட்டு இருப்பேன்..

மரத்துக்கு பின்னால் நல்லா பார்த்தீங்கன்னா திருபரங்குன்றம் மலை தெரியும்..




இந்த போட்டோல இன்னும் தெளிவாவே நீங்க திருபரங்குன்றம் மலையைப் பார்க்கலாம்..


இந்த முள்ளு மரத்தில் உள்ள இந்த சின்ன பூச்சி ..பார்ப்பதற்கு மாடு மாதிரியே இறுக்கும்..தொட்டா.. சுத்தி ஓடும..இது இருந்த கூடவே பெரிய கட்டெறும்பும் இருக்கும்!



இந்த தோட்டம் இப்போ முன்ன மாதிரி இல்ல.

இங்கே நீங்க பார்க்கிற வெள்ளை குட்டி கல்லு சொல்லும்..எல்லாம் plot-ஆ மாறிவருகிற கதையை..!